Santhosha Kanneere

Vairamuthu

இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே
செந்தேனே……

ஆண் : இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே
செந்தேனே……

ஆண் : கண்ணீரே கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே…கண்ணீரே
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே
காணாய் கண்ணே
கண்ணீரே…

ஆண் : கண்ணீரே கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே…. கண்ணீரே
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே
காணாய் கண்ணே
கண்ணீரே…

குழு : ………………………………………

ஆண் : ம்ம்……ம்ம்…
உன் பார்வை பொய்தானா
பெண்ணென்றால் திரைதானா
பெண் நெஞ்சே சிறைதானா
சரிதானா…..

ஆண் : பெண் நெஞ்சில்
மோகம் உண்டு
அதில் பருவத் தாபம் உண்டு
பேராசைத்தீயும் உண்டு
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று

ஆண் : புதிர் போட்ட
பெண்ணே நில் நில்
பதில் தோன்றவில்லை சொல் சொல்

ஆண் : கல்லொன்று
தடை செய்த போதும்
புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கல்லொன்று தடைசெய்த போதும்
புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கண்ணில் கண்ணில் கண்ணீர்
இன்ப கண்ணீரே

ஆண் : தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே
காணாய் கண்ணே
கண்ணீரே…

ஆண் : ம்ம்……ம்ம்…
பால் நதியே நீ எங்கே
வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ
சொல் கண்ணே

ஆண் : பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு

ஆண் : யே.. மர்ம ராணி நில் நில்
ஒரு மௌன வார்த்தை
சொல் சொல்

ஆண் : உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்…
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்…
கண்ணில் கண்ணில் கண்ணீர்
இன்ப கண்ணீரே

குழு : சந்தோஷக் கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே

ஆண் : தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
குழு : தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
ஆண் : பெண்ணே பெண்ணே
பேசாய் பெண்ணே
குழு : பெண்ணே பெண்ணே
பேசாய் பெண்ணே
ஆண் : கண்ணே கண்ணே
காணாய் கண்ணே
குழு : கண்ணே கண்ணே
காணாய் கண்ணே
ஆண் : கண்ணீரே… குழு : கண்ணீரே…
ஆண் : கண்ணீரே கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே கண்ணீரே……..

Trivia about the song Santhosha Kanneere by A.R. Rahman

When was the song “Santhosha Kanneere” released by A.R. Rahman?
The song Santhosha Kanneere was released in 1998, on the album “Uyire”.
Who composed the song “Santhosha Kanneere” by A.R. Rahman?
The song “Santhosha Kanneere” by A.R. Rahman was composed by Vairamuthu.

Most popular songs of A.R. Rahman

Other artists of Pop rock